இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை…

வணக்கம் சிவகுரு சிவசித்தனுக்கு .

சிவகுருசிவசித்தனின் மிகமிக சிறப்பான கருத்து!!! .

இரைப்பை சுருங்கினால் இறையை உணரலாம்
இரையில் நாட்டம்கொண்டால் இறையை நாடமுடியாது
நாவை தாண்டினால் அத்தனையும் நரகம்
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு
நாவைக்கட்டுப்படுத்து இரைப்பை சுருங்கும்

உடலே ஒரு ஆலயம் அதை ஆலயமாக்குவதும் குப்பைதொட்டியாகுவதும் இரைப்பையே. இரைப்பை அளவுக்கு மீறி இரையை கேட்பதில்லை அது நமக்கு அளவை உணர்த்தத்தான் செய்கிறது.

நீதான் பேராசையில் ருசி என்னும் மாயைக்கு அடிமையாகி சிலவினாடிகள் சிறு இன்பத்துக்கு பலியாகி கண்ணில் கண்டைதை எல்லாம் அறிவு இல்லாமல் இரைப்பையில் திணித்து ஆலயமான உடலை உணவு கழிவுகளால் நிரப்பி குப்பைதொட்டியாக்குவதும் நீயே.

விலங்குகள் மரங்கள் கூட இரைப்பையில் இரையை அளவுக்கு மீறி திணிப்பதில்லை அரிதான மானிட பிறவி எடுத்த நாம் மனிதனாக வாழ்ந்து இரையை உணர இரைப்பை சுருங்க சிந்தாமணியில் சிவகுருசிவசித்தனின் ஒளித்திருத்தலத்தில் சிவகுரு சிவசித்தன் உணர்ந்து படைக்கப்பட்ட வாசிதேகக்கலையை பயிலுங்கள் உணவு கட்டுப்பாடு விதிமுறைகள் தவறாமல் நடப்பது நன்னெறிகளை கடைப்பிடித்தல் இவற்றால் இரைப்பை சுருங்குகிறது கழிவுகள் படிப்படியாக நீங்குகிறது.

கழிவுகள் நீங்க உடல் தேகமாகி ஆலயமாகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது கழிவுகள் எனும் இருள் நீங்கி அகத்தில் ஒளியான இறையை உணர்வாய்.

இறையை இறைதான் உணர்த்தமுடியும் இரைப்பையை சுருங்கவைத்து வாசிதேக கலையாலும் அவர் நாமங்களை உச்சரிப்பதாலும் இறையை நமக்கு உணர்த்துகிறார் சிவகுருசிவசித்தன்.
நன்றிகள் சிவகுரு சிவசித்தனுக்கு. 

Comments are closed