தவறை மறைக்க உண்மையை மறைத்து …தயங்குகிறவர்களால் காலதாமதம் ஆகின்றது.

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

சிவகுரு அவர்கள் பொதுவானவர் என்ற நிலை மாற அவரை உணர்ந்தவர்களே காரணம் ஆகின்றனர். சிவகுருவின் இந்த கூற்று உண்மையே!

சிவகுரு சிவசித்தன் அவர்களை அவரை சார்ந்தவர்கள் ஒரு சாதாரண மனிதனாக எண்ணுகிறார்கள். அவர் எல்லோரையும் போலவே இப்பூவுலகில் தோன்றியுள்ளதாக கருதுகின்றார்கள். அவர்களுக்கு சிவகுரு சிவசித்தன் வகுத்து கொடுத்த உணவு விதிமுறைகளின் மீதோ அல்லது அவரின் வாசி செயல்படும் விதத்தின் மீதோ துளி கூட நம்பிக்கை என்பது கிடையாது.

அவர்கள் உடலில் ஆத்மா என்ற ஒன்று இருப்பதை ஏற்பதில்லை. அவர்கள் சிவகுருவை வாசியோக குருகுலத்தை மற்ற யோகா மையங்களை போல நடத்த சொல்லி வலியுறுத்துகின்றனர். அவர்கள் உலக இயல்பினர் அவர்களுக்கு வேண்டியது எல்லாம் மதிப்பு, செல்வம், புகழ், பெருமை. உண்மையில் மேற்கூறியவற்றை பெறுவதற்குரிய பண்புகள் அவர்களிடம் துளி கூட இல்லை ஆனாலும் கர்வத்தோடு வாழ விரும்புகிறார்கள்.

கர்வத்தோடு வாழ விரும்பும் அவர்களின் புத்தியும் மழுங்கியே உள்ளது. அவர்கள் அறியாமையின் காரணமாக எல்லாவற்றையும் சுகபோகங்களின் நோக்கத்திற்காகவே செய்கின்றனர். தோல்வியை மட்டுமே தழுவுகின்றனர். ஆனாலும் பிடிவாதமாக சிவகுருவின் பக்கம் திரும்பாமல் காலம் தாழ்த்துகின்றனர்.

அவர்களின் பூர்வ ஜென்ம பலன் காரணமாக சிவகுரு அவர்களுடனேயே இருந்து பாதுகாப்பு அளித்து கொண்டு இருக்கிறார். அவர்களுடைய பேங்க் பாஸ்புக்கில் பூர்வ ஜென்ம பலன் என்னும் பணம் நிறையவே இருக்கிறது. பணம் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு நாள் அவர்கள் வழங்கும் காசோலை திரும்ப போகிறது பணம் இல்லாமல்.

அவர்கள் தற்பொழுது சிவகுரு சொல்வதையும் கேட்பது இல்லை. பூர்வ ஜென்ம பலனும் அற்று கொண்டு பொய் இருக்கிறது. பின்பு எப்படி அவர்களை காப்பாற்றுவது. உலகமே திரண்டு வந்து சிவகுருவுக்காக காத்திருக்க போவதை அவர்கள் அறியார்கள். அவர்களுடைய உள்ளம் அடுத்தவர் எண்ணத்தால் வந்த மாறுபட்ட கருத்துகளால் குழம்பி போய் இருக்கிறது.

அவர்களுக்கு எதிலும் உறுதியான கருத்து இருப்பதில்லை. அவர்கள் சஞ்சலப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். தூய அன்புக்காக ஏங்கும் சிவகுரு சிவசித்தனையும் சஞ்சலப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். சிவகுருவே அவர்களுக்கும் தங்கள் பால் உள்ள தவறான மயக்கத்தினை நீக்கி அருள் புரிய வேண்டும்.

சிவகுரு அவர்கள் தற்பொழுது உள்ள சூழ்நிலைக்கு காரணம் சிவகுருவை உணர்ந்தவர்களே என்று குற்ற சாட்டுகின்றார். இது உண்மையே. சிவகுருவை முதலாக ஒன்றாக ஏற்றுக் கொண்ட நாம் பூஜ்யம் என்பதை மறந்து செயல்படுகிறோம்.

கர்வத்தின் காரணமாக அல்லது கெட்டிக்காரத்தனமாக தப்பித்து கொள்ளும் நோக்கத்தோடு அவர் கேட்கும் குருதட்சினையை, உணர்ந்ததை அடுத்தவர்களிடம் எடுத்து சொல்லத் தயங்குகிறோம். மறுக்கிறோம் என்றே சிவகுரு அவர்கள் குற்றம் சாட்டுகின்றார். மறுப்பவர் அனைவரும் மறுபடியும் பூஜ்யம் ஆகப்போவது உறுதி.

தயங்குகிறவர்களால் கால தாமதம் ஆகின்றது. சிவகுருவின் தொடர்புக்கு முன்னால் நாம் துன்பப்பட்டுக் கொண்டு இருந்ததை போல் பலர் துன்பப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் சிவகுருவை வந்து சரண் அடைவதற்கு நாமே தடை கற்களாக இருக்கின்றோம். தயக்கத்தை ஒதுக்கி வைத்து விட்டு சிவகுருவுக்கு கீழ் படிந்து அவருடன் பயனிப்போமாக. சிவகுரு சிவசித்தன் அனைவருக்கும் பொதுவானவர் என்று நிலை மாறாமல் இருக்க

#  சிவகுருவுக்கு கீழ்படிந்து நடப்போம்.
#  அவர் சொல்லியதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் செய்வோம்.
#  சிவகுரு வகுத்து கொடுத்த உணவு முறையை சரியாக கடைபிடிப்போம்.
#  சிவகுருவால் கிடைத்த ஆனந்தத்தை நினைத்து நினைத்து மகிழ்ந்து இருப்போம்.
#  நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற நாம் பெற்ற அற்புத அனுபவத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்வோம், சிவகுரு அவர்கள் சொல்லிகொடுத்த வகையில்.

நன்றி சிவகுருவே! 

 

Comments are closed