உன் வாழ்வாய் வாழ்ந்துகாட்டுகிறாய்…

சிவசித்த வாசிதேக கண்ணா,

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதை
உன் வாழ்வாய் வாழ்ந்துகாட்டுகிறாய் – இன்று
உன் உணர்விலும் எண்ணத்திலும் எழுத்திலும் செயலிலும் – இதை
வெளிபடுத்துகிறாய், கண்முன்னே காட்டுகிறாய்.

நின் உண்மை உணர்வின் செயலில் மட்டுமே
உண்மையான ஆரோக்கியமான மனிதகுலத்தை உருவாக்க முடியும்.

இத்தகைய உன்னதமான செயலுக்கு ஒரு – கருவியாய்
இன்று செயல்பட்டு உனக்கு பயன்படுவதில்
ஆத்தும ஆனந்தத்தை என்னுள்ளே அடைவேன்.

சிவசித்த பேரொளியான நீ எனக்கு திருவருளை வழங்கி
என் ஆன்மாவின் எண்ணத்தை செயல்படுத்தி வழியையும்
வகுத்துக்கொடுப்பாய் சிவசித்த வாசிதேககண்ணா.

ஆனால்

மனித சிற்றறிவை பேரறிவாய் கற்பனை செய்து – கொண்டே
“நான்” எனும் அகந்தையால் உன்னை (உண்மையை) மறந்து
“மனம் என்றால் மற்றவன் எண்ணம்” என்று – நீயே
உரைத்தாய், மற்றவன் எண்ணத்தில் பயப்பட்டு – பிடிபட்டு
இன்று என்னுள்ளே உன் உண்மையை உணர்ந்தேன்
இனி நீ போதுமே சிவசித்த வாசிதேககண்ணா.

பொருள், புகழ், பதவி, என்ற ஆசையான எண்ணங்களில் – இருந்து
மூழ்கி விடாமல் நேர்மறையான எண்ணங்கள் உருவாகவும்,
பயம் என்ற பேயின் பிடியில் அகப்பட்டு விடாமல் – இருந்து
சோம்பலை தரும் உடல்கழிவுகளில் சிக்கியும், தடம் புரண்டும்
உனது திருவருளிலிருந்து நான் வெகு தொலைவில் செல்கிறேன்.

அதனால்
அனுதினமும் ஒவ்வொரு நொடியும்
உன்னை உணர தடங்கலாய் – இருக்கும்
என் எதிர்மறையான எண்ணத்தின், செயல்களை எரித்து
உன்னை பின் தொடர்ந்து வர வழிகாட்டியும்
உன் வழி நான்வர வழிஅமைத்து வரம் – ஒன்று
தருவாயா சிவசித்த வாசிதேககண்ணா
வரம் தர வந்தருள்வாயா வாசிதேககண்ணனே.

Comments are closed