ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு கற்பித்தல்

வணக்கம் சிவகுருசிவசித்தனுக்கு .

      அன்று அறுபதுவயதில் சிவகுரு சிவசித்தனிடம் வாசிதேகக்கலை பயில்வதற்கு முன்னால் ஆலயங்களில் வருடம் ஒரு தடவை வரும் காட்சியாக வரும் ஆதவனின் ஒளிக்கதிர்கள் கருவறையின் உள்ளே கண்ணுக்கு புலப்படாத உருவில் உள்ளதின் மேல் விழுவதை காண காத்து இருப்பேன்.

முழுநிறைவுடன் முழுமையாக பார்க்க  முடியவில்லை. நோய்வேதனை நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று வேண்டிவிட்டு வீடு திரும்பினேன் விடை கிடைக்கவில்லை அங்கு
விடைகிடைத்தது சிந்தாமணி சிவகுரு சிவசித்தன் ஒளித்திருத்தலத்தில் வாசிதேகக்கலையால் இங்கு இவரிடம் என்னத்தை வைத்தேன் சிவகுரு சிவசித்தனிடம் என் எண்ணங்களை வைத்தேன் நோயற்ற வாழ்வே வேண்டும் மருந்து மாத்திரைகள் இன்றி எங்கும் எவரிடமும் எக்காலத்திலும் கிடைக்காத குறைவற்ற செல்வம் குறைவில்லாமல் சிவகுரு சிவசித்தன் எனக்கு வழங்குகிறார்.

வேண்டியதை வழங்கிய அவரே என் அகத்தில் இன்று வீற்று இருக்கிறார். இன்று ஆலயத்தில் கண்ணுக்கு தெரிகின்ற திருஉருவத்தில் ஆதவனின் ஒளிக்கதிர்கள் அவர்மேல் விழுவதை காணும்போது என்று எது கிடைக்குமோ அன்றுதான் கிடைக்கும் என்று மனநிறைவு பெறுகிறேன். இன்று அவர் நாமத்தை உச்சரித்தாலே என் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்.

நன்றி சிவகுருவேவணக்கம் சிவகுருவே

சிவகுருவின் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு கற்பித்தல்

      சிவகுருவின் ஒவ்வொரு எழுத்திலும் எண்ணிலடங்காத ஆற்றல்கள் ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு அசைவிலும் ஓராயிரம் உள் அர்த்தங்கள் உண்டு பக்தர்களாய் பக்கத்தில் சென்றால் போதாது சிவகுரு ஒருவரே என எண்ணத்தில் உணரவேண்டும்.

ஏழுமலை, சபரிமலை, பழனிமலை, பாதயாத்திரை என்று அவர் பேணிய உடலை வேதனைகள் படுத்தாதே. இதுவரை அங்கெல்லாம் ஏதாவது கிடைத்ததா இல்லையே.

இங்கு சிவகுருவிடம் தானே கிடைக்கிறது இப்பொழுது சிவகுருவின் தரிசினத்தில் ஒரு நாலு கால் நாய் ஐந்தறிவுள்ளது சிவகுருவின் நடையில் அவர் அசைவின் படி நடக்கின்றது சிவகுருவின் அசைவில் அத்தனையும் அசையும் உன் ஆசையை அளவோடு வை பணம் பிணம் ஒரு ‘ப’ என்ற எழுத்தில் அது ‘பி’ என்று மாற ஒரு சுழிக்கு உன்னை அழைத்துச் செல்லவும் உணரவைக்கவும் சிவகுருவால் முடியும் சிவகுரு நம் நல்வாழ்வுக்குத்தான் நம்மை அவர் பாதையில் செல்ல நல்வழி காண்பிக்கிறார்.

ஐந்தறிவுள்ள உயிர் நடப்பது போல் நாமும் நடப்போம் எல்லாம் நம் நன்மைக்கே. சிவகுரு தன் நலம் கருதாது, நம்நலம் பேணி உயிர் புண்ணியம் எல்லோருக்கும் கிடைக்க இக்குருகுலத்தில் அவதரித்துள்ளார்.

நன்றிகள் சிவகுருவே .Comments are closed