சிறிது பணத்தில் அதிக நிம்மதி !!!

வணக்கம் சிவகுருவே

சிவகுருவின் கூற்று சிறிது பணத்தில் அதிக நிம்மதி !!!

      அளவோடு பணம் உள்ளவன் அதற்கு மேல் பேராசை பட்டுத்தான் பெறும் கஷ்டம் வேதனை முன்பு இருந்த நிம்மதி கூட தொலைந்துபோய் சரியான நேரத்தில் சாப்பிடாமல் கண்ட நேரத்தில் கண்டதை சாப்பிட்டு கானல்நீராய் காணும் இன்பங்களையும் அனுபவித்து உடலிலும் உள்ளத்திலும் கழிவுகள் தேங்கி கண்ட கண்ட வியாதிகளின் பெயரால் தானும் வேதனைப்பட்டு தன் குடும்பத்தையும் வேதனைகள் படவைக்கிறான்.

அந்த வழியில் தான் நானும் சென்று வேதனையுடன் சிவகுருவை சரணாகதி அடைந்து வாசிதேகக்கலையால் நல்வாழ்வுபெற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் நிறைவாகவே வாழ்கிறேன். சிறிது நேர பயிற்சி, சிறிது உணவு, சிறிது பணத்தில், சிறிது சேமிப்பு டாக்டர்களிடம் ஆலயங்களில் பணத்தை கொட்டி ஏமாறவில்லை.

விதி கட்டங்கள் நாள் கோள் நம்பிக்கை இல்லை தன்நம்பிக்கையை கொடுத்தார். தன்நம்பிக்கையின் ஏணியில் காலால் காலடி எடுத்து வைக்க வைத்துவிட்டார் சிவகுரு. அவர் மூன்று நாமங்கள் உச்சரிப்பே மனத்துக்கும் உடலுக்கும் மேலும் மேலும் உறுதியை உடலை உருக்கித்தருகிறது.

புழுவாய் கிடந்த நான் சீறும் சர்ப்பமாய் ஏளனம் செய்தவர்கள் முன்னிலையில் சிவகுருவின் சீருடையில் சிறப்பாக வாழ வைக்கிறார். சாகும் நிலையில் வந்த என்னை அறுபத்தைந்து வயதில் சாதிக்கும் நிலைக்கும் நிலைக்கு வழிகாட்டி அழைத்து செல்கிறார். சிறிது பணத்தில் மாதக்கட்டணம் நூறு ரூபாயில் அகத்தில் சிவகுரு ஒருவர் தான் என உணர்கிறேன்.

நன்றி சிவகுருவே . 

Comments are closed