முந்தைய செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக தற்பொழுது…

சிவகுருவே சரணம்!
சிவசித்தனே போற்றி போற்றி!

“எல்லாம் அவன் செயல்
எல்லாம் அவன் கொடுத்தது”

இதற்கு உரிய மறைபொருள் சிவகுரு சிவசித்தன் அவர்கள் உணர்த்தியது.

நமது செயல்களுக்கான களம் எல்லாம் வல்ல இறைவனின் இயற்கையால் இங்கு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. நமது முந்தைய செயல்களின் பலனை அனுபவிப்பதற்காக தற்பொழுது உள்ள உடல் கொடுக்கப்பட்டுள்ளது.

நமக்கு கொடுக்கப்பட்ட இல்லம், இல்லாள், தொழில், சுற்றம் மற்றும் நட்பு அனைத்துமே நமது செயல்களுக்கான பலனே தவிர இறைவன் காரணம் அல்ல. நமது இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் நமது செயல்களே என்று புரிந்து கொண்டு நமது செயல்களை எவ்வாறு நெறிப்படுத்துவது என்று முயற்சி செய்கின்றோம். அதில் தோல்வியையே தழுவுகின்றோம்.

#  உடல் துன்பத்தை தருகிறது.
#  இல்லம் துன்பத்தை தருகிறது.
#  மனைவி துன்பத்தை தருகிறாள்.
#  மக்கள் துன்பத்தை தருகின்றனர்.
#  சுற்றமும் நட்பும் துன்பத்தை தருகின்றனர்.
#  தொழில் துன்பத்தை தருகின்றது.
# அயலானும் துன்பத்தை தருகின்றான்.

எல்லோரும் தரும் துன்பம் இறைவன் ஒருவனாலேயே தீர்த்து வைக்க முடியும் என்ற பட்டறிவு உணர்த்தி அதற்குரிய தேடுதலை ஆரம்பித்தவுடன் சிவகுரு அவர்கள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றார்கள். சிவகுரு அவர்கள் எந்த நிலையிலும் உதவிபுரிய தயாராக இருக்கின்றார்கள். சிவகுரு அவர்கள் மூன்றே மூன்று விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த அறிவுறுத்தினார்கள்.

உணவு விதிமுறை, வாசியோக பயிற்சி மற்றும் சிவகுருவின் திருநாமம் சொல்லுதல். மூன்று விஷயங்களிலும் நாம் காட்டும் ஈடுபாட்டை பொறுத்து நமது எண்ணம் சொல் செயல் அனைத்தும் நெறிப்படுத்தப்பட்டு துன்பம் விலகி ஆனந்தம் கிடைத்தது. எல்லா விஷயங்களிலும் ஆனந்தம் தந்த சிவகுருவுக்கு நன்றி.

நாம் ஜீவாத்மா என்ற நிலை புரிந்தது. சிவகுரு அவர்கள் பரமாத்மா என்பதும் புரிந்தது. பரமாத்மாவின் வழிகாட்டல் படி நடக்கும் ஜீவாத்மா ஆனந்தம் அடையும் என்பதும் புரிந்தது. சிவகுருவுக்கு கீழ்படிந்து அவர் விரும்பும் செயல் அவர் விருப்பப்படி செய்து கொடுத்து கிடைத்த ஆனந்தத்தை தக்க வைத்துக்கொள்வோம்.

நன்றி சிவகுருவே!Comments are closed