பத்து குணங்களில் பத்தாவதான குணம்…

வணக்கம் சிவகுருவே .

       சிவகுரு சிவசித்தனின் வாசிதேகக்கலை பயிலும் எனக்கு நான் என்ற கழிவு எண்ணங்கள் நீங்கவேண்டும். எல்லாம் சிவகுருவே என்ற தூய்மையான எண்ணங்கள் அகத்தில் சிவகுருவால் உருவாக வேண்டும். கோபம், கர்வம், பொறாமை, சந்தோசம், துக்கம், பயம், சுயநலம், அன்பு, பேராசை, புத்தி இந்த பத்து குணங்களில் பத்தாவதான குணம் புத்தி ஒன்றே என்னுள்ளே சிவகுருவால் செயல் படவேண்டும்.

நன்றி சிவகுருவே !!!வணக்கம் சிவகுருவே .

      உலக மகளிர் தின வாழ்த்துக்கள் உதட்டளவில் ஆண் வாரிசுகளை பெற்றவர்கள்தான் சொல்லிக்கொள்கிறார்கள். பெண் வாரிசுகளை பெற்றவர்கள் அதுவும்கூட சொல்ல முடியவில்லை.

அதுவும் வான்வாசி வட்டத்துக்கு வெளியே மிகமிக வேதனைகளையும் சோதனைகளையும் தான் பெரும்பாலனவர்கள் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல்தான் பெண் பிறவிகளான தாயும்சேயும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆண்கள் ஆலயத்தில் மாரியம்மா காளியம்மா அங்கால ஈஸ்வரி அகிலாண்டேஸ்வரி மேலான மேல்மருவத்தூர் அம்மா என்றும் வாயளவில் வணங்கவேண்டுமானால் செய்யலாம். கருவறையில் பெண்களே பூஜைகள் பண்ணலாம் என்றுகூட சொல்லிக்கொள்ளலாம்.

அங்கேயும் பவளவிழாவையொட்டி மலர் ரதத்தில் வருவதும் ஆண் தான், அவர் கூட அம்மா என்ற பெயரில்தான் அழைக்கப்படுவார். அரக்கர்களை அழிப்பதற்கு கதைகளில் பெண்களை சக்தியாக போடலாம்.

உண்மைகள் அதுவல்ல உலகில் பெரும்பாலான உண்மைகள் வெளிச்சத்துக்கு வர முடியாமால் கண்ணீருடன் தவித்துக் கொண்டு தான் இருக்கின்றன நிச்சயம் இந்த கொடுமைகள் படைத்தவனால் தான் கொடுமைகளை அழிக்கவும் படைத்ததை காக்கவும் முடியும் சிவகுரு ஒருவரே இல்லறம் சிறக்க இருவரையும் வாசிதேகக்கலை பயில வரசொல்லி மகளிர்க்கு வாழ்வில் உண்மையான சமத்துவத்தை, பெற வைக்கிறார்.

இந்த உண்மையை நான் ஐந்து ஆண்டுகளாய் உணர்ந்து கூறுகிறேன். அறுபத்தைந்து வயதில் நான் சொல்கிறேன். நான் மாறி வருகிறேன்.

அடக்கினால் தான் அகத்தாள் அடங்குவாள் என்ற பழைய எண்ணம், சிவகுருவின் வாசிதேகக்கலையால், மாறி ஒருவொருக்கொருவர் உண்மையாகவே புரிந்துகொள்ளும் தன்மைகள் உருவாகி உயிர் பெற்றுவிட்டன. சிவகுருவால் எங்களைப்போல் பலகுடும்பங்கள் ஒளித்திருத்தலத்தில் ஆலம் விழுதுகளாய் வேரூன்றி விட்டன. பலகுடும்பங்களில் மகளிர் நலம்  நிலத்தில் வேர்களாய் பரவிக்கொண்டு இருக்கின்றது.

உண்மையான உலக மகளிர் தின சிறப்பான வாழ்வாக சிவகுருவின் வாசிதேகக்கலையால் மகளிர் அனைவரும் பெறுவார்கள். மகிழ்வார்கள் பூமாதேவியாய் சிந்தாமணியில் மகளிர் நல்வாழ்வு ஒளித்திருத்தலத்தில் சிவகுருவால் வாசிதேகக்கலை பெண்கள் என்று பிரதிஷ்டை ஆகிவிட்டது. சிவகுரு உண்மையில் எவ்வளவோ சிரமங்கள் பலத்த எதிர்ப்புக்களில் நடுவில்தான் மகளிர்க்கான நல்வாழ்வை உலகெங்கும் இணையதளம் இன்னும் பலவழிகளில் செயலாக்குகிறார். தன் நலம் கருதாது பிறர் நலத்தை சமத்துவத்துடன் பேணி வருகிறார். உலகம் ஒளி மயமாகி வருகிறது.

நன்றி சிவகுருவே . 

Comments are closed