சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 004

சிவசித்தனை வணங்குதல்

பெயர் :ம. சித்ரா
வயது :21
வில்வம் எண் :13 03 119
ஊர் :மதுரை
அலைபேசி எண் : +91 98428 70468

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல்எடை : 41 கிலோ
சிவசித்தன் கலையில் தற்பொழுது உடல்எடை : 39 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்:

சளி அடிக்கடி பிடிக்கும், காலை எழுந்தவுடன் தும்மல் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும், முதுகில் தேமல், நெற்றியில் அலர்ஜி, அடிக்கடி காய்ச்சல்.

சிவசித்தனிடம் வந்த பிறகு தேமல் மாறிக்கொண்டு இருக்கிறது, சளி பிடித்தல் நின்று விட்டது, நெற்றியில் அலர்ஜி வருவதில்லை.

சிவசித்தனின் திருநாமம் :
ஒரு நாளைக்கு மூன்று முறை கூறுகிறேன். காலை எழுந்தவுடன், பயிற்சிக்கு முன்னும், பின்னும். சிவசித்தன் திருநாமம் கூறும் பொழுது என் உடலானது முன்னும் பின்னும் சென்று அசைவதை உணர்கிறேன்.

ஏதாவது செயல்கள் செய்யும் முன் சிவசித்தனின் திருநாமம் சொன்னால் எல்லாம் நல்ல படியாக நடக்கும், பல பயன்கள் அடைந்துள்ளேன்.

காலையில் மலம் செல்லவில்லை என்றால் சிவசித்தனின் திருநாமம் சொன்னால் மலம் வந்துவிடும். சிவசித்தன் கலையை கற்றதால் எண்ணக் குழப்பங்கள் மாறியது.

சிவசித்தன் கலையை கற்கும் முன்பு தேர்வு பயம் இருக்கும், தற்பொழுது பயம் இல்லை. தனியாய் செல்வதற்கு தைரியம் வந்தது.

சிவசித்தன் கலையை கற்பதற்கு முன் நேரத்திற்கு எழுந்திருக்க மாட்டேன், சிவசித்தன் கலையை கற்ற பின் அதிகாலைமூன்றிலிருந்து மூன்றரை மணிக்குள் எழுந்துவிடுவேன்.

சிவசித்தன் அகத்தெளிவுரை மூலமாக மனித உடலை பற்றிய தகவல் நிறைய தெரிந்து கொண்டேன். சிவசித்தனை நினைத்தால் அகத்தில் ஆனந்தம் பிறக்கிறது.

சிவசித்தனின் வட்டத்துக்குள் இருப்பவர்களையும், சிவசித்தனை விட்டு வெளியே இருப்பவர்களையும் பார்க்கும் பொழுது நிறைய வித்தியாசம் இருக்கிறது.

எனக்கு ஒவ்வொரு விசயத்திலும் சிவசித்தன் நல்ல வழிக்காட்டி கொண்டிருக்கிறார். சிவசித்தனின் மும்முறைகளால் சுளுமுனை இயங்குவதை உணர்ந்திருக்கிறேன்.

வெளியூர் பயணங்கள் சென்றால் சிவசித்தன் அனுமதியோடு சென்றால் நமக்கு தேவையானது அனைத்தும் கிடைக்கும். சிவசித்தன் கலையை கற்கும் முன் காயங்கள் ஏற்பட்டால் சலம், நீர் வரும்.

இப்பொழுது தானாகவே காய்ந்துவிடுகிறது. சிவசித்தனிடம் வருவதற்கு முன் சுடு தண்ணீரில் குளித்தல், குடிக்க சுடு தண்ணீர், தயிர் சாப்பிடுவது இல்லை.

சிவசித்தனின் கலையை சிவசித்தனின் மாணவியாக சேர்ந்து கற்றபின் தினமும் குளிர்ந்த நீரில் குளித்து, குளிர்ந்த நீர் பருகி, தினமும் தயிர் சாதம் உண்டு, நலமாக இருக்கிறேன்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed