சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 007

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : அ .மாலதி.
வயது : 75
வில்வம் எண் : 16 02 101
ஊர் : மதுரை
படிப்பு : 5 ம் வகுப்பு

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்:

தலை சுற்றல், உடல் கனமாக இருந்தது, சுகர், இரத்த அழுத்தம், தைராய்டு, உடலில் இருக்கும் எலும்புகள் குளிருதல்.
இவருடைய பெரியப்பா பேரனை ஒரு திருமண வீட்டில் சந்தித்த பொழுது சிவசித்தனை பற்றி கூறினார்கள்.

பின் வேறொரு நண்பர் மூலமாகவும் சிவசித்தனைப் பற்றி தெரிந்து கொண்டு இவரும் இவர் மகன் கோபி சங்கர் அவர்களும் இங்கு வந்து சேர்ந்தார்கள். இவர்கள் வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது.

இங்கு வந்து சிவசித்தன் கலையை கற்ற பின் உடல் லேசாக இருக்கிறது. நெருக்கி உட்கார்ந்தால் மூச்சு அடைக்கவில்லை. மனம் லேசாக இருக்கிறது.

எது நடந்தாலும் #சிவசித்தன்இருக்கிறார் என்ற எண்ணம் வருகிறது. எப்பொழுதும் சிவசித்தன் நினைவு இருக்கிறது. உடல் துன்பம் குறைந்த உள்ளது.

மருந்து சாப்பிடாமல் இருப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. முதல் முறை இவர் ஒரு பயிற்சியாளர் சிவசித்தன் கலையை செய்கையில் அதை பார்த்த பொழுது இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது என்று கூறினார்கள்.

மையத்திற்கு வந்த முதல் நாள் சிவசித்தனை கண்டதும், இதுவே நமது இடம் என்பதை புரிந்து கொண்டதாக குறிப்பிடுகிறார்.

இவருக்கு நாற்பது வயதில் மிகுந்த உடல் உபாதைகளினால் கர்பப்பையை எடுத்து விட்டார்கள். இதன் பிறகு தான் மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் வந்தது என்று கூறினார்கள்.

சிவசித்தனின் திருநாமம் :

ஒரு நாளைக்கு பத்து முறை சிவசித்தனின் திருநாமம் கூறுகிறார்.திருநாமம் கூறும் பொழுது அவ்வப்போது பின் தலையில் ஊறுவது போல் உள்ளது.

அண்மையில் இவர் கால்களில் சூடான பால் கொட்டியது. சிவசித்தனிடம் தீர்வு கேட்டு அது சரியாகிக் கொண்டு வருகிறது.

முன்பு இவருக்கு சுகர் இருந்த காரணத்தால் புண் சலம் பிடித்து விடும் ஊசி போடுங்கள் என்று உறவினர்கள் கூறினார்கள்.

ஆனால் இவர் சிவசித்தன் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அவர் சரி செய்து விடுவார் என்று கூறி சிறிதும் பயம் இல்லாமல் இருந்து வருகிறார்.

இவர் அக்காவிற்கு திருநாமம் கூறச் சொல்லி இருக்கிறார். அவரும் நன்றாக இருப்பதாக கூறினார்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed