சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : சந்திரக்கல்யாணி
வயது : 51
வில்வம் எண் : 11 12 304
ஊர் : மதுரை
அலைபேசி எண்: +91 94427 75685
படிப்பு : B.Sc.

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல்எடை : 72 கிலோ
சிவசித்தன் கலையில் தற்பொழுது உடல்எடை : 61 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள்:

சந்திரக்கல்யாணி சிவா அவர்களின் இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று கால்கள் நடக்க முடியாமல் போனது.

முதல் நாள் வரை நன்றாக விளையாடிக்கொண்டிருந்த பையன் மறுநாள் எழுந்திரிக்கவில்லை, ஏனென்று தெரியவில்லை. ஒருநாள், மறுநாள், மூன்று நாட்கள் ஆகியும் அவனால் எழுந்திரிக்க முடியவில்லை.

உடனே ஆங்கில மருத்துவம் பார்த்ததாகவும், நரம்பியல் நிபுணரிடம் சென்றதாகவும், பல மருந்துகள் எடுத்தும் அவர் பையனுக்கு சரியாகவில்லை, அப்போது அவர்கள் இருந்த ஊர் திருத்தங்கல்.

அங்கே மருத்துவம் பார்த்தோம், அங்கிருந்து மதுரைக்கு வந்து ஆறு மாதங்கள் பார்த்ததாகவும், ஹோமியோபதி மருத்துவம் எடுத்தும் என் பையன் தவழும் நிலையும், சுவர் பிடித்துக்கொண்டு லேசாக நடப்பதும், பள்ளிக்கு அனுப்பும் போது வண்டியில் உட்கார்ந்தும், அப்படியே தூக்கிக் கொண்டு உட்கார்ந்தும் வந்ததாகவும் கூறினார்கள்.

அதற்கு பின் சில மாதங்களில் சிவசித்தன் கலையை பயின்று வரும் அவரின் தோழி ஒருவர் அவரை பார்த்து , சிவகுரு சிவசித்தன் அவர்கள் நாடி பார்த்து குறைகளை கூறி சரி செய்வதாக தகவல் கொடுத்துள்ளார், அவர்கள் கொடுத்த தகவல் காரணமாக, சந்திரக்கல்யாணி சிவா அவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது.

சிவசித்தன் அவர்கள் நாடி பார்த்து என் பையனின் நிலையை சரி செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டு மதுரைக்கு வந்தோம்.

குடும்பத்துடன் அவரும், கணவரும், இரண்டு மகன்களும் வந்து சிவசித்தனிடம் நாடி பார்த்தோம் என்று கூறினார்கள்.

சந்திரக்கல்யாணி சிவாவிற்கு உள்ள உடல் தொந்தரவுகள்:

முதுகுவலி, உடல்சோர்வு, எண்ணக்குழப்பம், சைனஸ் பிரச்சனை, முதுகுவலிக்கான காரணம் அந்த சிவாவிற்கு இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்தது.
அவர்கள் திருத்தங்கல்லில் இருந்த பொழுது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வந்ததாகவும், அவரின் உடல்நிலை மாற்றத்தை சிவசித்தன் அறிந்து பயிற்சி மாற்றம் செய்ததாகவும், நாற்பது நாட்களில் அவரின் முதுகு வலியே இல்லை என்று கூறினார்கள்.

சிவசித்தன் சொன்ன சொல் எனக்குள் செயலானதை உணர்ந்தேன் என்று கூறினார்கள்.
மாதவிடாய் சுழற்சி :

மாதவிடாய் சுழற்சி இரண்டு வருடங்களுக்கு முன்பு நான்கு மாதங்கள் வரவில்லை என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.

சிவசித்தனிடம் கூறி தீர்வு கேட்டேன், சிவசித்தன் பயிற்சி செய்யச் செய்ய சரியாகிவிடும் என்று கூறினார்கள். குடும்ப உறுப்பினர்கள் வற்புறுத்தல் காரணமாக ஸ்கேன் செய்தேன்.

அவர்கள் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்கள். மறுநாள் சிவசித்தனிடம் வந்து தகவல் தெரிவித்தேன்.சிவசித்தனிடம் தெரிவித்த மறுநாளே எனக்கு மாதவிடாய் கழிவுகள் வெளியேறியது என்றும் கூறினார்கள்.

குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் சிவசித்தனிடம் கூறும்பொழுது சிவசித்தன் எனக்கு அறிவுரை கூறுவார்கள். அதைகேட்டு பின்பற்றும் பொது அந்த பிரச்சனைகள் எல்லாம் சரியானது என்பதை உணர்ந்திருக்கிறேன்.

என் இரண்டு பிள்ளைகளும் சிவசித்தன் வழியை பின்பற்றி ஆனந்தமாகஇருக்கிறார்கள்.

சிவசித்தன் திருநாமங்கள் உணர்ந்தவை :

சிவசித்தன் திருநாமங்கள் காலை முதல் இரவு வரை எத்தனை தடவை என்று கணக்கில் இல்லை . சிவசித்தன் திருநாமங்கள் கூறிக்கொண்டே இருக்கின்றேன்.

சிவசித்தனின் அறிவுரைகள் கேட்டு நடந்து கொள்வதாகவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் மிக்க நலமுடன் இருக்கின்றேன் என்று கூறினார்கள்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed