சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 010

சிவசித்தனை வணங்குதல்

பெயர் : S.சந்தானலட்சுமி
வயது : 49
வில்வம் எண் : 12 12 301
ஊர் : தேனி
அலைபேசி எண்: +91 89733 69201
படிப்பு : B.Sc., B.Ed வேதியல்

சிவசித்தன் கலைக்கு வந்தபொழுது உடல்எடை : 49 கிலோ
சிவசித்தன் கலையில் தற்பொழுது உடல்எடை : 43 கிலோ

சிவசித்தனிடம் வந்த காரணங்கள் :

கை வலி, வலது கையில் தோல்பட்டை வரை வலி, கை தூக்க முடியாத நிலை, கழுத்து வலி , இடது கால் வலி, குறுக்கு வலி, இந்த வலிகளுடன் அவரால் ஆசிரியர் பணி செய்ய முடியவில்லை.

ஆசிரியப்பணி தொடர முடியாமல் வீட்டில் இருந்து உள்ளார். இடது கண்ணில் சதை வளர்ந்துள்ளது. இதற்கு மருத்துவம் பல செய்தும் கண் சரியாகவில்லை.

ஆங்கில மருத்துவம், ஆயுர் வேதம், பிசியோதெரப்பி போன்ற மருத்துவம் பார்த்தும் உடல் வலி குறையவில்லை. இந்த வலிகளுடன் வீட்டு வேலை பார்க்க முடியாத நிலை.

சிவசித்தன் நாடி பார்த்த பிறகு வலிகள் குறைந்ததாகவும், சிவசித்தன் கலையை கற்ற பின் உடல் வலியும், உடல் எடையும் குறைந்ததாக கூறினார்கள்.

சிவசித்தனின் திருநாமத்தால் உணர்ந்தவை.

ஒரு நாளில் காலை முதல் இரவு வரை 25 தடவை சிவசித்தனின் திருநாமங்கள் சொல்வதாகவும் சிவசித்தனின் எண்ணத்தில் இருந்தால் தானாக தேகசற்ப ஆற்றல் உணருதல் இருந்து கொண்டே இருக்கும்.

சிவசித்தனின் திருநாமங்கள் கூறும் பொழுது நெற்றியின் புருவமையத்தில் அழுத்தம், வெப்பம், முதுகு பின் புறம் ஊறல் ஏற்படுவதாகவும் கூறினார்கள்.

பத்மாசனம் செய்யும் பொழுது முதல்முதலில் சிவசித்தன் குலசாமி உருவம் காட்டியதாகவும், பின்னர் கிருஷ்ணர் உருவத்தில் காட்சி தந்ததாகவும், நேற்று மாலை சிவசித்தன் மாலையுடன் காட்சி தந்ததாகவும் கூறினார்கள்.

இங்கு வந்த பின்பு எனக்கு சிவசித்தன் அவர்கள் அக ஆதி மாலைஅணிவித்தார்கள். அதை நேற்றே காட்சியாக நான் கண்டதை எண்ணி பூரிப்படைந்தேன்.

தன்னுடைய வீட்டில் இரவு முழுவதும் சந்தன வாசம் வீசுவதாக கூறினார்கள்.சிவசித்தனிடம் வரும் முன் கோயில், ஜாதகம், பரிகாரம் என்று நிறைய செய்ததாகவும்,

ஆனால் இன்று சிவசித்தன் கலையை பயின்றபிறகு, அந்த எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது, தற்பொழுது எந்த கோயிலுக்கும் செல்வது இல்லை என்று கூறினார்கள்.

மாதவிடாய் கழிவுகள் சிவசித்தனின் கலையை பயின்ற பிறகு மாதம் ஒரு முறை வருவதாகவும், இதற்கு முன் மாதவிடாய் காலங்களில் வலி, வேதனைகள் அதிகம் இருக்கும், இன்று அந்த தொந்தரவு இல்லாமல் இருக்கின்றேன்.

ஒரு சில மாதங்களில் மாதவிடாய் சுழற்சி மாறியது. அதற்கு காரணம் சிவசித்தன் செயல் முறைகளின் படி தண்ணீர் அருந்தாதது தான் என்று புரிந்து கொண்டேன்.

உணர்ந்த பிறகு என்னை திருத்திக்கொண்டேன். நலமாக இருக்கிறேன்.

உண்மை சிவசித்தன்.

Comments are closed